Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜக சார்பில் யார் பிரதமர் வேட்பாளராக நின்றாலும் அவர் பெயர் நரேந்திர மோடிதான் - அண்ணாமலை பேட்டி

03:02 PM Jan 10, 2024 IST | Web Editor
Advertisement

பாஜக சார்பில் யார் வேட்பாளராக நின்றாலும் அவர் பெயர் நரேந்திர மோடிதான்  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையை பாஜக தலைவர் அண்ணாமலை துவங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது..

” திமுக தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. 9 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடிப்படை மாற்றங்களை செய்துள்ளோம். உலகம் முழுவதும் கிருஷ்ணகிரி மாம்பழங்களை விரும்புகிறார்கள். 9 ஆண்டுகளில் 1.54 லட்சம் விவசாயிகளுக்கு 30,000 ரூபாய் பணத்தை மத்திய பாஜக அரசு வங்கி கணக்கில் செலுத்தி உள்ளது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்புதான் தமிழ்மொழி உலக அளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெருமையான செங்கோலை பாராளுமன்றத்தில் பிரதமர் மோடிதான் வைத்தார். பிரதமர் மோடி இந்தியா முழுவதும் தமிழ் படிக்க சொல்லி மக்களை ஊக்குவிக்கிறார்.  தமிழ் நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் முக்கியதுவம் கொடுக்கும் பிரதமர் நமக்கு கிடைத்துள்ளார்.

பிரதமர் மோடி இல்லை என்றால் அந்த இருக்கைக்கு வர யார் இருக்கிறார்கள் என நினைத்து பார்க்க வேண்டும்.  மோடியை எதிர்க்க ஆல் இல்லை என கார்த்திக் சிதம்பரம் கூறியதால் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். மோடிக்கு நிகராக பிரதம வேட்பாளர் என கூறும் தகுதி இந்தியாவில் எந்த தலைவருக்கும் இல்லை

பாஜக ஆட்சிக்கு வந்தால் 3 வருடத்தில் படிப்படியாக மதுக்கடையை மூடி கள்ளுக்கடையை திறந்து வைப்போம். வருடத்துக்கு 1 லட்சம் கோடி பனை மரம் மூலம் வருமானம் கிடைக்கும். தமிழ்நாட்டில்  18 முதல் 60 வயது வரை 5ல் ஒருவர் குடிக்கு அடிமையாகி உள்ளார். குடிப்பதை தடுக்க முடியாது அதனால் கள்ளுக்கடை திறப்போம். பாஜக சார்பில் யார் வேட்பாளராக நின்றாலும் அவர் பெயர் நரேந்திர மோடி தான்.

Tags :
AnnamalaiBJPmodiNarendra modiPM ModiTN BJP
Advertisement
Next Article