“இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் நாதக சின்னம் முன் நின்று தான் கேட்க வேண்டும்” - சீமான் பரப்புரை!
இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் எங்கள் சின்னம் முன்பு நின்று தான் கேட்க வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கெளசிக் ஆதரவாக தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு சிறப்பு ஆற்றினார்.
அவர் பேசியதாவது,
“பல திருத்தம் இந்த நாட்டில் செய்ய வேண்டியுள்ளது. சீமானும் உங்கள் வேட்பாளர் கௌசிக்கும் உங்களிடம் இருந்து வந்தவர்கள். பயம் என்பது வீரனுக்கு எதிரி, நாங்கள் வீரர்கள். ஆயிரம் ரூபாய் யார் கேட்டது. அது மக்கள் பணம். அது சாதனை அல்ல. ஆயிரம் ரூபாய் நீங்கள் வைத்து கொள்ளுங்கள். அதற்கு பதிலாக தூய்மையான குடிநீர் கொடுங்கள். பாஜக பெரிய கட்சியாம். அதனால் சீமானின் சினைத்தை முடக்கி உள்ளது.
ஒரு கூட்டமே எங்களை எதிர்க்கிறது. நாங்கள் வளர்ந்து விட்டோம். சின்னத்தை எடுத்து விட்டதாக நினைப்பார்கள், ஆனால் எங்கள் சின்னத்தில் தான் வாக்கு கேட்கிறார்கள். ஆறு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி என்பதை, 3 சட்டமன்றத்திற்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி என்ற அமைப்பு மாற்றப்பட வேண்டும். கட்சத்தீவை எப்படி மீட்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
நாங்கள் எப்போதோ பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்கலாம். கூட்டணியில் இருப்பவர்களுக்கு மட்டும் அவர்கள் கேட்டும் சின்னம் கிடைக்கிறது. இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் எங்கள் சின்னம் முன்பு நின்று தான் கேட்க வேண்டும். கட்சி அரசியல், தேர்தல் அரசியல் தான் இங்கு நடக்கிறது. மக்கள் அரசியல் நடக்கவில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.