For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு!

10:34 PM Nov 30, 2023 IST | Web Editor
சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்  தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு
Advertisement

சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்கப்போவது காங்கிரஸா அல்லது பாஜகவா என்பது குறித்து தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

Advertisement

சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில், நவ.7 மற்றும் நவ.17 ஆகிய இருநாள்கள், மொத்தம் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. டிச.3 வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், காங்கிரஸ் 40-50 இடங்களை கைப்பற்றும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 36-46 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக வர வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 1-5 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்என் நியூஸ்18 கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 46 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 41 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 41-53 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 36-48 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவி5 நியூஸ் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 54-66 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 29-39 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக வர வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 46-56 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 30-40 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன்-கி-பாத் கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் 42-53 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 34-45 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 40-50 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 36-46 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போல்ஸ்ட்ராட் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 40-50 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 35-45 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2018 சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கர் சட்டசபையில் மொத்தமுள்ள 90 இடங்களில் 68 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது, பாஜக 15 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், சத்தீஸ்கரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு அதிகமுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

Tags :
Advertisement