For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அதிமுக யார் கட்டுப்பாட்டில் வரும்?” - அண்ணாமலையின் கருத்துக்கு டிடிவி தினகரன் விளக்கம்!

09:47 PM Apr 13, 2024 IST | Web Editor
“அதிமுக யார் கட்டுப்பாட்டில் வரும் ”   அண்ணாமலையின் கருத்துக்கு டிடிவி தினகரன் விளக்கம்
Advertisement

தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரன் பின்னால் அதிமுக வரும் என்று அண்ணாமலை பேசியதற்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பிரத்யேக தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடும் நிகழ்வு ஆண்டிபட்டியில் நடைபெற்றது. அமமுக தேனி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் டிடிவி தினகரன் தேர்தல் வாக்குறுதியினை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுபடி 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், மத்திய அரசு நிதியுதவியுடன் வைகை அணை தூர்வாரப்படும், udaan திட்டத்தின் கீழ் தேனியில் விமான நிலையம் அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பேசினார்.

ஆண்டிபட்டியில் அமமுக தேனி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் டிடிவி தினகரன் தேர்தல் வாக்குறுதியினை வெளியிட்டார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை என்னையும் ஓபிஎஸ்-ஐயும் பிரித்து பார்த்து பேசவில்லை” என தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் பின்னால் வரும் என்று அண்ணாமலை பிரசாரத்தின் போது பேசியதற்கு தினகரன் பதில் கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகள் வெளியீட்டிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், “நான் பாஜக உடன் கூட்டணி அமைத்திருப்பதை கண்டு எடப்பாடி பழனிசாமி பயந்து போய் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை மிகவும் உயர்த்தி பேசினார். அவர் தான் பச்சோந்தி. நான் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பெரா வழக்கு போடப்பட்டது. அன்னிய செலாவணி விதி மீறல் வழக்கு தான் என் மீது உள்ளது” என தெரிவித்தார். 

Tags :
Advertisement