Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பூர் தொகுதியில் களமிறங்க வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் யார்?

01:54 PM Feb 17, 2024 IST | Jeni
Advertisement

திருப்பூர் மக்களவை தொகுதியில் எந்தெந்த கட்சி சார்பில் யார் வேட்பாளராக களம் காண வாய்ப்புள்ளது என்பது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி,  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.  அப்படி அந்த தொகுதி சி.பி.ஐ வசம் சென்றால்,  தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சுப்பராயன் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது.

ஒருவேளை திமுக நேரடியாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டால்,  திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளரும்,  வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாபதிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி.க்களான சிவசாமி,  சத்யபாமா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியியைப் பொறுத்தவரை மாவட்ட பொதுச் செயலாளர் காடேஸ்வர தங்கராஜ் அல்லது மாநில துணைத்தலைவர் கனகசபாபதி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
AIADMKBJPCongresscpiDMKElection2024Elections2024LokSabhaElectionParliamentaryElectionTiruppur
Advertisement
Next Article