ராமநாதபுரம் தொகுதியில் மோதுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் வேட்பாளர்கள் யார் யார்?
11:43 AM Feb 17, 2024 IST
|
Jeni
அதேபோல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எஸ்.கே பவானி ராஜேந்திரனும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கே, ராமநாதபுரம் தொகுதியை திமுக மீண்டும் ஒதுக்குமாயின், கடந்த தேர்தலில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நவாஸ் கனியே மீண்டும் வேட்பாளராக போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ராமநாதபுரம் தொகுதியில் செல்வாக்கு நிறைந்த வேட்பாளர் ஒருவரை திமுக-விற்கு எதிராக நிறுத்த வேண்டும் என அதிமுக தலைமை திட்டம் தீட்டி வருவதாக தெரிகிறது. அந்த வகையில், 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான அன்வர் ராஜா-விற்கு அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கலாம் என கூறப்படுகிறது. 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வான அன்வர் ராஜா, அதிமுக அமைச்சரவையிலும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அங்கம் வகித்தவர். அதே நேரத்தில் முன்னாள் அமைச்சரான மணிகண்டனும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமையிடம் வாய்ப்பு கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவராக பொறுப்பு வகிக்கும் தரணி ஆர்.முருகேசன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள ஜி.பி.எஸ் நாகேந்திரன் ஆகியோர் வேட்பாளர் சீட் கேட்டு தேசிய தலைமையை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே ராமநாதபுரம் தொகுதியில் இவர்களுள் ஒருவரே பாஜக சார்பாக களமிறக்கப்படுவார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
நாடாளுமன்ற தேர்தல் களத்தில் ராமநாதபுரம் தொகுதியில் எந்தெந்த கட்சிகள் யாரை வேட்பாளர்களாக களமிறக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து விரிவாக காணலாம்.
Advertisement
நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை இந்த முறை மாநில மாணவரணி தலைவரும், வழக்கறிஞருமான ராஜீவ் காந்தியை களமிறக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்கு வங்கியை அதிகரிக்கும் ஒரு வியூகமாக திமுக இந்த முயற்சியை கையில் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Next Article