Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும்! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

09:50 PM Jun 01, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பார்க்கலாம்.

Advertisement

நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெல்லப்போவது யார்? என்பதை முன்கூட்டியே கணிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

ரிபப்ளிக் டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி,

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 0 - 3 இடங்களிலும் (31.9% வாக்குகள்), காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 35 - 38 இடங்களிலும் (50.4% வாக்குகள்), அதிமுக கூட்டணி 0 - 1 இடங்களிலும் (16.1% வாக்குகள்), வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம்:

அதிக எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (55.6% வாக்குகள்) 69 - 74 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ (33.5% வாக்குகள்) 6 - 11 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் (8.2% வாக்குகள்) ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 29 இடங்களிலும் (45% வாக்குகள்), காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 19 இடங்களிலும் (41% வாக்குகள்) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் (14% வாக்குகள்) ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 21 இடங்களிலும் (52% வாக்குகள்), காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 7 இடங்களிலும் (42.2% வாக்குகள்) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் (6.8% வாக்குகள்) ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா:

தெலங்கானாவில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 8 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 7 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 22 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

ஒடிஸா:

ஒடிஸாவில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 9 - 12 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஜு ஜனதா தளம் 7 - 10 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்:

பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 10 இடங்களிலும், இதர கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 22 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் 19 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தில்லி:

தில்லியில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 5 - 7 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 0 - 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

பிகார்:

பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 37 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 28 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

கோவா:

கோவாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம்:

அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 10 - 12 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 0 - 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 0 - 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசம்:

ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 - 4 இடங்களிலும் (58.8% வாக்குகள்), காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 0 - 1 இடத்திலும் (38.6% வாக்குகள்) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் (2.6% வாக்குகள்) ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

கேரளம்:

கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 17 இடங்களிலும், கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா:

திரிபுராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

அருணாசல பிரதேசம்:

அருணாசல பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர்: மணிப்பூரில் மொத்தமுள்ள 2 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ ஒரு இடத்திலும், இதர கட்சிகள் ஒரு இடத்திலும், வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

குஜராத்:

குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 24 - 26 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 0 - 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட்:

ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 10 - 12 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ’இந்தியா கூட்டணி’ 2 - 4 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

Tags :
BJPCongressElection2024Elections 2024Elections with News7 tamilexit pollexit pollsIndiaLok Sabha Elections 2024ndanews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article