For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மிக்ஜாம் புயல் மற்றும் எதிர்பாராத பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை? தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

10:16 PM Dec 29, 2023 IST | Web Editor
மிக்ஜாம் புயல் மற்றும் எதிர்பாராத பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
Advertisement

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை, எதிர்பாராத பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை என்பது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

மின்சாரம், குடிநீர், உணவு இல்லாமல் தவித்ததோடு மழைநீரும் சகதியும் முற்றிலுமாக வடிய சில நாட்கள் ஆனதால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். இதனை அடுத்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்டம் முழுவதும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு தமிழ்நாடு அரசு 6000 ரூபாய் நிவாரண நிதி அறிவித்து விநியோகம் செய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ‘மிக்ஜாம்’ புயலால் பாதித்த மாவட்டங்களாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதே போன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளம் பாதித்த மாவட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டு ஒரே அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement