இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளம்... உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மண்டி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழையால் திடீர் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ள நீரில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பல குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திடீர் வெள்ளத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியானது. இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரூ.400 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மண்டியில் மட்டும் 37 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஜூலை 7 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.