“எங்கே தவறு நடந்தாலும் தட்டிக் கேட்பேன்” - விஜயதரணி!
“எங்கே என்றாலும் தவறு நடந்தால் கண்டிப்பாக தட்டிக் கேட்பேன்” என பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியவள் தான். கடந்த சில காலமாக நிறைய பிரச்னைகள் மற்றும் பெண்களுக்கான தடம் காங்கிரஸ் கட்சியில் மறுக்கப்பட்டது. என்னைத் தவிர காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 14 ஆண்டுகளாக பெண்கள் இல்லை. என்னைக்கூட தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவு தான் காங்கிரஸ் கட்சியில் செயல்பாடுகள் இருக்கிறது. ஒரு தேசிய கட்சியில் இருந்து விலகி மற்றொரு தேசிய கட்சியில் இணைந்து இருக்கிறேன்.
காங்கிரஸில் அரசியல் தளத்தில் பணியாற்றும் பெண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். 37 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய நான் தான் இந்த முடிவுக்கு வருகிறேன் என்றால் அதை புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஆதாயமும் எதிர்பார்க்காமல் வேலை செய்பவள் நான். எந்த ஒரு தலைமை பதவியையும் பெண்களுக்கு தரக்கூடாது என்ற எண்ணம் தான் தவறானது. சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு மேல் தலைமை பதவிக்கு வந்து பெண்கள் மக்களுக்காக பணியாற்ற முடியாதா?
அதில் அவநம்பிக்கை கொண்டவர்கள் தான் காங்கிரஸ் கட்சியினர்.
கட்சி பாஜக. அதனால்தான் என்னை பாஜகவில் இணைத்துக் கொண்டேன். மோடி
பெண்களுக்கான இடஒதுக்கீட்டை சட்டமாக்கி இருக்கிறார். இஸ்லாமிய பெண்களுக்கு
முத்தலாக், சொத்தில் சம உரிமை வாங்கி தந்து இருக்கிறார். இஸ்லாமிய பெண்கள்
பாஜகவுக்கு வாக்களிப்பளிப்பார்கள். பெண்களே வேண்டாம் என துரத்தும்
காங்கிரஸ் கட்சியில் எங்கே நிற்பது? இந்த முறையாவது காங்கிரஸ் கட்சியில்
33 சதவீத சீட்டு தருவார்களா?
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் மத்திய அரசின் ரேசன் திட்டங்கள் கொண்டு சேர்க்கப்படவில்லை. மக்களுக்கு சேர வேண்டிய விஷயங்களை அரசியல்படுத்தி தடுக்காதீர்கள். என்னை நம்பி வாக்கு அளித்தவர்களுக்கு இந்த திட்டங்கள்
சென்று சேரவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை நாற்கரசாலை
போட முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக காங்கிரஸ் எம்பி இருந்தும் போடவில்லை. அதே போன்று நிறைய விஷயங்கள் கொண்டு சேர்க்கப்படாமல் இருக்கிறது. அவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டுமென்றால் ஆளுங்கட்சியோடு பயணித்தால் தான் கொண்டு சேர்க்க முடியும்.
தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக நாம் பார்க்கிறோம். மத்திய அரசின்
திட்டங்களை கொண்டு சேர்த்தால் தான் தொடர்ச்சியாக அந்த இடத்தை தக்க வைத்துக்
கொள்ள முடியும். அவ்வாறு இல்லை என்றால் பின் தங்கிய மாநிலமாக தமிழ்நாடு
மாறிவிடும். மத்திய அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் தலைமை பதவிகள் தர மறுக்கின்றனர். அது மட்டும்
காரணம் அல்ல வளர்ச்சி, ஊழலற்ற அரசாங்கம் அண்ணாமலையின் பாதயாத்திரை, மக்கள் பாஜகவை நோக்கி வருவதை வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
கொள்ளவில்லை. என்னை மாறுபட்ட ஆளாக பார்க்க வேண்டாம். எங்கே என்றாலும் தவறு நடந்தால் கண்டிப்பாக தட்டிக் கேட்பேன். "பெட்ரோமாக்ஸ் லைட், பீஸ் போன பல்பாக இருந்தால் இத்தனை செய்தியாளர்கள் வருவீர்களா? நல்ல எல்இடி விளக்காக இருப்பது தான் இத்தனை செய்தியாளர்கள் வந்திருக்கிறீர்கள்.
காங்கிரஸ் கட்சியை அவர்கள் வளர்க்கட்டும். இன்று எதிர்க்கட்சி என்ற நிலைமை கூட இல்லாத அளவுக்கு பணிகள் இருக்கிறது. காங்கிரஸ் அழிவு பாதைக்கு போகிறது என்பதை சீமான் புரிந்து கொண்டார். நான் ஒரு போராளி. நிறைய விஷயங்களை போராடிதான் பெற இருந்தது. பாஜகவில் வானதி இந்திய அளவில் மகளிர் அணி தலைவராக இருக்கிறார். அதே போன்று காங்கிரஸ் கட்சியில் அதே பதவிக்கு வரும் போது அடுத்த பொதுச் செயலாளர் நிலையில் உள்ள எனக்கு அந்தப் பதவியை வழங்க வேண்டும் என கேட்டதற்கு இந்தி அதிகம் பேசக்கூடிய மாநிலங்களில் இருந்து தான் அந்த பதவி வழங்கப்படும் என பதில் வந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.