Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சேமிப்புக் கிடங்குகள் அமைக்க செலவிட்ட ரூ.309 கோடி எங்கே சென்றது ..? - அண்ணாமலை கேள்வி..!

நெல் கொள்முதல் தொடர்பாக பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதிய நிலையில் திமுக ஆட்சியில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க செலவிட்ட ரூ.309 கோடி எங்கே சென்றது..? என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வியுள்ளார்.
08:02 PM Nov 18, 2025 IST | Web Editor
நெல் கொள்முதல் தொடர்பாக பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதிய நிலையில் திமுக ஆட்சியில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க செலவிட்ட ரூ.309 கோடி எங்கே சென்றது..? என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வியுள்ளார்.
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் “விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

Advertisement

இந்த நிலையில் தமிழ் நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில், சேமிப்புக் கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க, ரூ.309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கூறியிருக்கிறது.

ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது இந்த ரூ.309 கோடி நிதி..? நெல் கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், அமைச்சர் சக்கரபாணியின் துறையான உணவுப் பொருள் வழங்கல் துறையில், ரூ.160 கோடி ஊழல் நடைபெற்றிருந்ததைக் குறித்து சமீபத்தில் கூறியிருந்தோம். இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஏற்பட்ட 30 - 40 நாட்கள் தாமதத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பு.

கடந்த ஒரு மாதமாக நெல் கொள்முதல் தாமதத்தைக் குறித்து விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும், தஞ்சாவூரில், திமுக அமைச்சர் சக்கரபாணியிடம் விவசாயிகள் நேரடியாக வாக்குவாதம் செய்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொழுதுபோக்கிவிட்டு, யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்? திமுக அரசின் ஊழலாலும், தவறுகளாலும், தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா..? ஒவ்வொரு ஆண்டும், நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கவும், உலர வைக்கவும் கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, திமுகவின் கடித நாடகம் அல்ல. தமிழக விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போதுதான் நிறுத்தும் இந்த திமுக அரசு..?” தெரிவித்துள்ளார்.

Tags :
AnnamalaiCMStalinlatestNewsPMModitnbjabTNnews
Advertisement
Next Article