For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சென்னையில் மிதிவண்டி பாதைகள் எங்கே?” - மு.க. ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

09:06 PM Sep 04, 2024 IST | Web Editor
“சென்னையில் மிதிவண்டி பாதைகள் எங்கே ”   மு க  ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
Advertisement

சென்னையில் சைக்கிள் பாதைகள் எங்கே? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ கடற்கரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்டு பாடியபடி சைக்கிளில் பயணம் செய்தார். இது தொடர்பான வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் சைக்கிள் பாதைகள் எங்கே? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னையில் மாநில அரசுத் திட்டங்களின்படியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சைக்கிள் பாதைகளையும் காணவில்லை; வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் சைக்கிள்களையும் காணவில்லை. அவை எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்? . என வினவியுள்ளார்.

Tags :
Advertisement