தவெகவின் முதற்கட்ட சுற்றுப்பயண பிரசாரம் எப்போது ? வெளியானது புதிய அறிவிப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார். அதன்படி வரும் 13ம் தேதி திருச்சியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
இதனிடையே திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் எந்தெந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி,
13-09-2025 : சனிக்கிழமை - திருச்சி, பெரம்பலூர், அரியலூர்
20-09-2025 : சனிக்கிழமை - நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை
04-10-2025 : சனிக்கிழமை - கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
05-10-2025 : ஞாயிற்றுக்கிழமை - கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
11-10-2025 : சனிக்கிழமை - குமரி, நெல்லை, தூத்துக்குடி
11-10-2025 : சனிக்கிழமை - காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை
25-10-2025 : சனிக்கிழமை - தென் சென்னை, செங்கல்பட்டு
01-11-2025 : சனிக்கிழமை - கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்
08-11-2025 : சனிக்கிழமை - திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
15-11-2025 : சனிக்கிழமை - தென்காசி, விருதுநகர்
22-11-2025 : சனிக்கிழமை - கடலுர்
29-11-2025 : சனிக்கிழமை - சிவகங்கை, ராமநாதபுரம்
06-12-2025 : சனிக்கிழமை - தஞ்சாவூர், புதுக்கோட்டை
13-12-2025 : சனிக்கிழமை - சேலம், நாமக்கல், கரூர்
20-12-2025 : சனிக்கிழமை - திண்டுக்கல், தேனி, மதுரை