For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சபாநாயகர் பேசியது தவறானது” - பாஜக எம்எல்ஏக்கள் பேட்டி!

11:59 AM Feb 12, 2024 IST | Web Editor
“சபாநாயகர் பேசியது தவறானது”   பாஜக எம்எல்ஏக்கள் பேட்டி
Advertisement

சபாநாயகர் அப்பாவு மரபில் இல்லாதவற்றை எல்லாம் பேசியதால் தான் ஆளுநர் எழுந்து சென்றார் என சட்டமன்ற பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். 

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.  சட்டப் பேரவைக்கு வந்த வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, பேரவை தலைவர் அப்பாவு,  துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து தமிழில் வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார். ஆனால்,  சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கமால் 2 நிமிடங்களில் புறக்கணித்தார்.

ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்பாவு உரையை முடித்த பின் ஆளுநர் ரவி சட்டசபையிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

முறைப்படி ஆளுநர்,  சபாநாயகர்,  முதலமைச்சர் வந்தார்கள்.  முறைப்படி அரசு கொடுத்ததை தான் வாசிக்க வேண்டும்.  ஆளுநர் முதலிலும் நாட்டுப்பண் வாசிக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லி உள்ளார்.  எல்லாம் முறையாக தான் போனது.  இதுவரை மரபில் இல்லாத ஒன்றாக இறுதியாக சபாநாயகர் சொல்லி உள்ளார்.

சபாநாயகர் இந்த வார்த்தைகளை பேசாமல் இருந்திருந்தால் ஆளுநர் முழுமையாக இருந்து இருப்பார்.  தேசியகீதம் பாடச்சொல்வது தவறில்லையே.  சபாநாயகர் இதையெல்லாம் பேசியதால்தான் ஆளுநர் சென்றார்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Tags :
Advertisement