For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுரை சித்திரை திருவிழா - 7 ஆம் நாளான இன்றைய நிகழ்வு என்ன?

07:19 AM Apr 18, 2024 IST | Web Editor
மதுரை சித்திரை திருவிழா   7 ஆம் நாளான இன்றைய நிகழ்வு என்ன
Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏழாம் நாளான இன்று, சுவாமியும், அம்மனும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் நந்திகேசுவரர் - யாளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.  

Advertisement

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருவிழாவாக சித்திரை திருவிழா அமைந்துள்ளது.

இந்த ஆண்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 12 முதல் 23-ம் தேதி வரை 12 நாட்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஏப்ரல் 12-ம் தேதி சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.21ம் தேதியும், வைகையில் அழகர் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின்  7 ஆம் நாள் நிகழ்வில் சுவாமியும், அம்மனும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் நந்திகேசுவரர் - யாளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.  இதனைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுவாமியும், அம்மனும் தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு நான்கு மாசி வீதிகளில் திருவீதிவுலா வருகிறார்கள்.

பின்னர் இரவு 7 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுவாமியும், அம்மனும் நந்திகேசுவரர் - யாளி வாகனத்தில் புறப்பட்டு நான்கு மாசி வீதிகளில் திருவீதிவுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

Tags :
Advertisement