For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக தமிழுக்கு என்ன செய்தது ? - அன்புமணி ராமதாஸ்..!

தமிழை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக தமிழுக்கு என்ன செய்தது ? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
08:43 PM Oct 06, 2025 IST | Web Editor
தமிழை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக தமிழுக்கு என்ன செய்தது ? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக தமிழுக்கு என்ன செய்தது     அன்புமணி ராமதாஸ்
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் நடைபயணத்தில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர் மதுரையில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”திமுக என்கிற கொண்டுங்கொல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நடைபயணம் மேற்கொண்டு வருகின்றேன். திமுக ஆட்சியில் மதுரையின் நிலை என்ன? தென்மாவட்டங்களில் உள்ள பெரும்பாலனோர் வேலை வாய்ப்பை தேடி சென்னை செல்கிறார்கள். காரணம் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. வேலை இல்லாத காரணத்தினால் தான் ஜாதி சண்டை வருகிறது. சென்னையில் சாதி சண்டை உள்ளதா? . திமுக பேசுவது தான் சமூக நீதி? ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளது?

Advertisement

பெண்கள் தயவு செய்து திமுக வுக்கு ஓட்டு போடாதீர்கள். யார் வர வேண்டும் என்பதை விட யார் வர கூடாது என்ற முடிவை எடுங்கள். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு 1000 காரணங்கள் உள்ளது. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் உண்டா?. திமுகவிற்கு மூன்று தேர்தலில் மக்கள் வெற்றியை கொடுத்தார்கள். தமிழ்நாட்டிற்கு திமுக என்ன செய்தது?? நான்காவது தேர்தலில் திமுகவிற்கு வெற்றியை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் மீண்டும் தப்பி தவறி திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் பேரப்பிள்ளைகளை நீங்கள் மறந்து விட வேண்டும். ஏனென்றால் இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் புழக்கம் அதிகமாகி விட்டது.

தமிழை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக தமிழுக்கு என்ன செய்தது? இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் தாய் மொழியை படிக்காமல் பட்டம் வாங்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் தான் தமிழே படிக்காமல் பட்டம் வாங்கலாம். இது தான் தலையெழுத்து. இதற்கு காரணம் திமுக தான். மொழி, பண்பாடு, நாகரிகம், பெண்கள் பாதுகாப்பு, விவசாயம் அனைத்திலும் திமுக தோல்வி அடைந்துள்ளது.

2 மாதத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தலாம். மேடைக்கு மேடை சமத்துவம், சாதி ஒழிப்பு என்றும் சொல்லும் திமுக சாதியை வைத்து தானே அரசியல் செய்கிறது? சாதி வாரி கணக்கெடுப்பு என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என்று நடத்த வேண்டியது தானே? தமிழ்நாட்டிற்கு 4.5 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கும் ஸ்டாலின், 2 கோடி செலவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா? எல்லா மாநிலத்திலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி விட்டார்கள். ஆனால் ஸ்டாலினிடம் கேட்டால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த எனக்கு அதிகாரம் இல்லை என்று ஏமாற்றி வருகிறார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாதது தான் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய மன்னிக்க முடியாத துரோகம்” என்று பேசினார்.

Tags :
Advertisement