For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

12:45 PM Dec 15, 2024 IST | Web Editor
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன
Advertisement

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தல், உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Advertisement

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் அரங்கில், இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில்,

தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2026ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க திமுக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்து நியாயமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோதாவரி - காவிரி, பரம்பிகுளம் - ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களை தொடர தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பார்முலா 4 பந்தயம், பேனா நினைவு சின்னம் உள்ளிட்டவற்றிற்காக நிதியை வீணடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரி விதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெஞ்சல் புயல் பாதிப்பின்போது, மக்களின் அடிப்படைத் தேவைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் விலைவாசி உயர்வு உள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் கபட நாடகம் ஆடும் மாநில அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும் போதிய அழுத்தம் கொடுத்த டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்கத் தவறியதாக தமிழ்நாடு அரசுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக பொதுக்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் தொழிலதிபர் ரத்தன் டாடா, சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement