அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பாம்புகள் இறக்குமதி செய்யப்பட்டதா? - வைரல் வீடியோ உண்மையா?
This News Fact Checked by ‘Newsmeter’
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் லுஃப்தான்சா ஏர்லைன்ஸைப் பயன்படுத்தி பாம்புகளை இறக்குமதி செய்ததாகக் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சரக்கு பெட்டியில் இருந்து தப்பிய பாம்பு போன்ற உயிரினங்கள் சறுக்கி விழும் வீடியோ காட்சிகள் வைரலாகி வரும் வீடியோ இடம்பெற்றுள்ளன. "Lufthansa Airlines in Los Angeles (sic) இல் பாம்புகளை இறக்குமதி செய்கிறது" என்ற தலைப்புடன் இந்த வீடியோவை பேஸ்புக் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார் .வீடியோ கிளிப்பில் உள்ள உரை தெலுங்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு :
நியூஸ்மீட்டர் இந்த கூற்று தவறானது என்று கண்டறிந்துள்ளது. வைரலான வீடியோ லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் அல்லது லாஸ் ஏஞ்சல்ஸுடன் தொடர்புடையது அல்ல, மாறாக இது கனடாவின் வான்கூவர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (YVR) எடுக்கப்பட்டது. . வீடியோவில் இருந்து கீஃப்ரேமின் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலின்போது ஜூலை 12, 2024 அன்று வெளியிடப்பட்ட, 'கனடா விமான நிலையத்தின் டார்மாக்கில் விலாங்கு மீன்கள் சறுக்கி விழும் காட்சிகள் இடம்பெற்ற வீடியோ இணையத்தில் வைரல்’ என்ற இந்தியா டிவியின் செய்திக் கட்டுரைக்கு எங்களை அழைத்துச் சென்றது. புகாரில் உள்ள வைரல் வீடியோவைப் போலவே, விமான நிலையத்தின் டார்மாக்கில் அதே உயிரினங்களைக் காட்டும் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்கள் போன்ற தோற்றம் அந்த அறிக்கையில் உள்ளது.
இந்த அறிக்கையின்படி, வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில், டார்மாக்கில் விலாங்கு மீன்கள் சிதறிக் கிடந்த வீடியோ படம் பிடிக்கப்பட்டது. இந்த செய்தியில் “ விலாங்கு மீன்கள் டொராண்டோவிலிருந்து வான்கூவருக்கு ஏர் கனடா சரக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன” என குறிப்பிடுகின்றன. வீடியோவில் இடம்பெற்ற காட்சிகள் கன்வேயர் பெல்ட்டில் சேதமடைந்த பகுதியை காட்டுகிறது. அதில் இருந்து சுமார் அரை மீட்டர் அளவுள்ள விலாங்கு மீன்கள் தோன்றி தரையில் விழுகின்றன. சுமார் பன்னிரெண்டு விலாங்கு மீன்கள் டார்மாக்கில் சுழன்று கொண்டிருப்பதைக் கண்டதாக செய்தி அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. அந்தச் சம்பவத்தின் வீடியோவை வேறு கோணத்தில் காட்டும் X இடுகையும் கட்டுரையில் லிங்க் செய்யப்பட்டது.
ஜூலை 10, 2024 அன்று வெளியான Daily Hive இன் இந்த சம்பவம் பற்றிய அறிக்கையையும் நாங்கள் கண்டறிந்தோம். அறிக்கையின்படி, ஜூலை 7, 2024 அன்று இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்றும் X இல் இருந்து இந்தியா டிவி அறிக்கை இடுகையில் பதிக்கப்பட்ட அதே வீடியோவையும் இதில் இடம்பெற்றுள்ளது.
NDTV, News18 (ஜூலை 12 அன்று வெளியிடப்பட்டது) மற்றும் ஜூலை 11, 2024 அன்று வெளியிடப்பட்ட Global News மற்றும் CBC பிரிட்டிஷ் கொலம்பியாவின் யூடியூப் வீடியோ செய்தி அறிக்கைகள் போன்ற அதே சம்பவத்தின் அறிக்கைகளையும் நாங்கள் கண்டறிந்தோம். எனவே, அந்தக் கூற்று தவறானது என்று முடிவு செய்கிறோம். வைரல் கிளிப் இடம்பெற்றவை பாம்புகள் அல்ல எனவும் அவை லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் அல்லது லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் தொடர்பில்லாதது என்றும் தெளிவாகிறது.
முடிவு :
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் லுஃப்தான்சா ஏர்லைன்ஸைப் பயன்படுத்தி பாம்புகளை இறக்குமதி செய்ததாகக் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ததில் அவை பாம்புகள் அல்ல விலாங்கு மீன்கள் எனவும் மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அல்ல மாறாக கனடாவின் வான்கூர் என்பதும் தெளிவாகிறது.
Note : This story was originally published by ‘Newsmeter’and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.