"பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் பட்டியலினத்தவர்கள் பழங்குடி மக்கள் அதிகம் இருப்பது வரவேற்கத்தக்கது" - சபாநாயகர் அப்பாவு பேட்டி!
பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பழங்குடியின மக்களும் பட்டியிலினத்தவர்களும் அதிகம் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அய்யா வைகுண்டரின் அவதார தின விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதார
பதியில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மற்றும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படியுங்கள் : WPL 2024 : RCB அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி!
அப்போது அவர் பேசியதாவது :
"கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள 117 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற இருந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருச்சி பகுதியில் ரயில்வே காலிப்பணியிடங்களில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்கள் 1000 பேரை நியமித்திருக்கிறார்கள். வடமாநிலத்தவர்களை முன்கூட்டியே தேர்வு செய்து வைத்துக்கொண்டு கண் துடைப்பிற்காக தேர்வு நடத்துகிறரார்கள்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பழங்குடியின மக்களும், பட்டியிலினத்தவர்களும் அதிகம் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது .
ஆனால், பழங்குடியினத்தவராக இருக்கக்கூடிய குடியரசுத்தலைவரை ஏன் நாடாளுமன்ற
திறப்பு விழாவிற்கும், ராமர் கோயில் திறப்பு விழாவிற்கும் அழைக்கவில்லை"
இவ்வாறு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறினார்.