For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம் - த.வா.க. தலைவர் வேல்முருகன்!

04:33 PM Feb 17, 2024 IST | Web Editor
காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம்   த வா க  தலைவர் வேல்முருகன்
Advertisement

திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.

Advertisement

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தென்மண்டல நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய கட்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு இந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறியதாவது,

“வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இதுவரை திமுகவுடன் நடைபெறவில்லை. அப்படி நடைபெறும்பட்சத்தில் ஒரு தொகுதியை கேட்டு பெறுவோம். தமிழக வாழ்வுரிமை கட்சியின் பெயர் ஆங்கில எழுத்துக்களில் TVK என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றுள்ள நிலையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கும் TVK என ஆங்கில எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளார். இதனால் தொண்டர்களிடையே குழப்பமான சூழல் நிலவ வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் ஆணையம் இது தொடர்பாக கருத்துக்களை கேட்டு உரிய முடிவு எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் ஒரு தொகுதி கூட பெற முடியாது. முன்பு போல் இல்லாமல் தற்போது பாஜக கிராமப்புறங்களில் நல்லதொரு வளர்ச்சியை பெற்று உள்ளது. தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை. எனவே, இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும்பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள்.

காவேரி மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அரசியல்ரீதியாக உரிய அழுத்தங்களை கொடுத்து, நீதிமன்றம் சென்று உரிமையை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்”

இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார். 

Tags :
Advertisement