For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் - 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் பேட்டி!

06:59 AM Feb 19, 2024 IST | Web Editor
கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம்   4 ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் பேட்டி
Advertisement

விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டதில், நேற்று (பிப். 18) மத்திய அரசுடன் நடைபெற்ற 4-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் நேற்று (பிப்.13) ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் அதாவது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசார் தடையை உடைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறினர்.

இதனிடையே விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுடன் கடந்த 8, 12 மற்றும் 16-ம் தேதிகளில் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில், மத்திய அரசுடன் தங்களது கோரிக்கைகள் குறித்து விவசாய சங்கங்கள் நேற்று (பிப். 18) 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் ஆகியோர் விவசாயிகள் அமைப்பினருடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுடனான 4ஆம் கட்ட பேச்சுவார்த்தையில், விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க அவசர சட்டத்தை உடண்டே இயற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் பஞ்சாப் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி என்ற விவசாய சங்கத்தின் பொது செயலாளர் சர்வான் சிங் பாந்தர் கூறும்போது,

“குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய அரசின் முன்மொழிதலை பற்றி அடுத்த 2 நாட்களில் நாங்கள் ஆலோசனை மேற்கொள்வோம். அரசும் பிற கோரிக்கைகளை பற்றி தீர ஆலோசனை மேற்கொள்ளும். இதில், முடிவு எதுவும் கிடைக்கவில்லை என்றால், எங்களுடைய டெல்லி செல்லும் பேரணியை 21-ம் தேதி நாங்கள் தொடருவோம் என்று கூறியுள்ளார். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை டெல்லி செல்லும் போராட்டம் தொடரும்” என விவசாய சங்க தலைவர் ஜகஜித் சிங் தல்லேவால் கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விவசாய பிரதிநிதிகளுடன் ஒரு ஆக்கப்பூர்வ மற்றும் விரிவான விவாதம் நடைபெற்றதாகவும், அரசின் முன்மொழிவுகளை பற்றிய முடிவை விவசாய தலைவர்கள் இன்று (பிப். 19) அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

Tags :
Advertisement