Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்!" - ஓபிஎஸ்

09:58 PM Feb 05, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான்
போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

Advertisement

புதுக்கோட்டையில் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் முன்னாள் முதலமைச்சர்
ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது.  இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.
கிருஷ்ணன்,  வெல்லமண்டி நடராஜன்,  சட்ட மன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன்,  ஜேசிபி பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான்
போட்டியிடுவோம்.  சின்னம் முடக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.  அப்போது எந்த
சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை முடிவு செய்வோம்.  வரும் 24 ஆம் தேதி சசிகலா கொடுக்கும் விருந்திற்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் கட்டாயம் கலந்து கொள்வேன்.

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.  அதிமுக கரைவேட்டியையும், கொடியையும் பயன்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் அதிக அளவில் உள்ளது.  பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கவில்லை.
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியவுடன் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

மீண்டும் 3-வது முறையாக பாரத பிரதமர் மோடி பிரதமராக வருவது உறுதி.  கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு பாஜக அரசில் எந்தவிதமான தொந்தரவும்
இல்லை.  உத்தர பிரதேசத்தில் கூட பாஜகவிற்கு சிறுபான்மையினர் மிகுந்த வரவேற்பு
அளித்து வருகின்றனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திமுக அரசு எப்படி நடவடிக்கை எடுக்கவில்லையோ, அதே போன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்து ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி கனவு உலகத்திலேயே சஞ்சரித்து வருகிறார்.  அதிமுக-வில் 2 கோடி தொண்டர்கள் உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது சுத்த பொய். முன்னாள் முதலமைச்சர் என்பதன் அடிப்படையிலேயே எனக்கு சட்டமன்றத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.  சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற பதவி
சட்டமன்றத்தில் கிடையாது."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
BJPElectionElection2024EPSloksabha election 2024Narendra modiOPSPanneerselvamtamil nadu
Advertisement
Next Article