For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் - காங்கிரஸ் எச்சரிக்கை!

05:25 PM Nov 23, 2023 IST | Web Editor
குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம்   காங்கிரஸ் எச்சரிக்கை
Advertisement

பட்டியலின மக்களை அவமதிக்கும் விதத்தில் பேசிய நடிகை குஷ்பு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது வீட்டை முற்றுகையிடப்போவதாக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

சமீபத்தில் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒருவரின் கருத்துக்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, ‘உங்களுடைய சேரி மொழியில் எல்லாம் பேச முடியாது’ என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸின் பட்டியலினப் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவின் தலைவர் எம்.பி ரஞ்சன் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”மன்சூர் அலிகான் திரிஷா விவகாரத்தில், நடிகை குஷ்பூ மகளிருக்காக குரல் கொடுத்தது வரவேற்கத்தக்கது. ஆனால் கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் பட்டியலினத்தவர்களையும், உழைக்கும் வர்க்கத்தையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டுள்ள குஷ்பூ சுந்தரை வன்மையாக கண்டித்துள்ளோம். பட்டியலின சமூக மக்களை கொச்சைப்படுத்துவதை, காங்கிரஸ் கட்சியின் பட்டியல் பிரிவு ஒருபோதும் அனுமதிக்காது.

குஷ்பூ சுந்தரின் X தள பதிவை பதிவை நீக்க வேண்டும். 24 மணி நேரத்தில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம். தொடர்ந்து மக்களுடைய பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது காங்கிரஸ் கட்சி. ஜெய்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினிகாந்த் த்ரிஷா குறித்து பேசியது சரி என்றால், மன்சூர் அலிகான் பேசியதும் சரியே. ரஜினிகாந்த் பேசியது தவறு என்றால் மன்சூர் அலிகான் பேசியதும் தவறு.

2024ல் மோடியை வீட்டிற்கும் ராகுல் காந்தியை நாட்டிற்கும் அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். குஷ்பூவுக்கு 24 மணி நேரம் கேடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் குஷ்பு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவருடைய வீட்டை முற்றுகை இடுவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement