“ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒன்று சேர்ந்தவர்கள் நாங்கள்” - நியூஸ்7 தமிழுக்கு பரோடா தமிழ் சங்க நிர்வாகிகள் பிரத்யேக பேட்டி!
குஜராத்தில் இருக்கும் தமிழர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் பரோடா தமிழ் சங்கம் செயல்பட்டு வருவதாக சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் பெரிய மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. குஜராத்துடன், கோவா, அசாம், பீகார், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் என மொத்தம் 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவைத் தொகுதிகளுக்கு 3ம் கட்டமாக வரும் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது. காங்கிரஸ் 24 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான ஆம் ஆத்மி 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன. 3வது கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இதனால், 3-ம் கட்ட தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.
குஜராத்தில் இருக்கும் தமிழர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் பரோடா தமிழ் சங்கம் செயல்பட்டு வருவதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களுடன் நமது நியூஸ்7 தமிழ் செய்தியாளர் வசந்தி நடத்திய கலந்துரையாடலை காண...