For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 98 % மக்களுக்கு நிவாரண நிதி வழங்கிவிட்டோம்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!

08:35 PM Dec 22, 2023 IST | Web Editor
“சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 98   மக்களுக்கு நிவாரண நிதி வழங்கிவிட்டோம் ”   முதலமைச்சர் மு க ஸ்டாலின் தகவல்
Advertisement

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 98 சதவீத மக்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிவாரண நிதியை இரண்டு வாரங்களில் கொடுத்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

சென்னை பெரம்பூர் டான் போஸ்கோ தனியார் பள்ளியில் திமுக சிறுபான்மை நல உரிமை
பிரிவு சார்பில் கிறிஸ்மஸ் பெருவிழா நடைபெற்றது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தொடர்ந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மேடையில் இருந்த தலைவர்களுக்கு இனிப்பை ஊட்டி விட்டு தனது மகிழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்திருந்த பள்ளி மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து 2,000 பேருக்கு மளிகை பொருட்களான அரிசி, எண்ணெய் மற்றும் புத்தாடைடைகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

தொடர்ந்து மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

முதலில் கிறிஸ்துவ மக்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு நடக்கிறது கிறிஸ்துமஸ் விழா, நடத்துபவர் இந்து
சமய அறநிலைத்துறை அமைச்சர். இதுதான் திராவிட மாடல் அரசு. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சேகர்பாபு நடத்தும் இந்த விழா ஒரு சமத்துவ பெருவிழாவாக நடைபெற்றது.
இந்திய நாடு என்பது பல்வேறு மதத்தை பின்பற்றக்கூடிய எல்லா மக்களும் ஒற்றுமையாக
வாழக்கூடிய நாடு.

எல்லா மதமும் அன்பை தான் வலியுறுத்துகிறது.சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு உண்மை அக்கறையோடு தான் வேலை செய்தோம். அமைச்சர்களும், அதிகாரிகளும் மக்களோடு மக்களாய் இணைந்து செயல்பட்டார்கள். அமைச்சர் சேகர்பாபு 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரவும் பகலுமாக தன்னார்வலர் கூட உழைத்தார்கள். மழை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு ரூ.6000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்த இரண்டு வாரங்களில் நிவாரண நிதி கொடுத்து முடித்த அரசு தான் திராவிட அரசு. 98 % நிவாரண நிதி மக்களுக்கு சென்று அடைந்துவிட்டது.

மீண்டும் ஐந்து லட்சம் பேர் நிவாரண நிதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களின் விண்ணப்பமும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு நிவாரண நிதி வழங்கப்படும். ஒன்றிய அரசு பணம் தரும் என்று நினைத்துக் கொண்டு இல்லாமல் உடனடியாக நிவாரண நிதி வழங்கினோம். தென் மாவட்டங்களில் கூட நிவாரண நிதி வழங்கவுள்ளோம்.

தென் மாவட்டங்களை சந்தித்து ஆறுதல் கூறும் பொழுது அரசு இயந்திரங்கள்
செயல்பட்டதால் தான் எங்களை காப்பாற்றி உள்ளார்கள் என்று கூறினார்கள். தமிழக மக்கள் எல்லோரும் ஒன்றாக இருப்பது பல நபர்களுக்கு பிடிக்கவில்லை. ஒன்றாக இருக்கும் மக்களை பிரிக்க வேண்டுமென அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் என்ன செய்தாலும் தமிழ்நாட்டு மண்ணை யாராலும் எதுவும் செய்ய முடியாது.

மழை பாதிப்பு போன்ற நேரங்களில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் துணை நிற்க
வேண்டும். அப்படி யாரும் திமுக அரசுக்கு உதவி செய்யவில்லை. கொரோனா காலகட்டத்தில் எதிர் கட்சியாக திமுக தான் களத்தில் இறங்கி வேலை செய்தது. எவ்வளவோ பணி செய்த போதும், குறை சொல்ல மட்டும் முண்டி அடித்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

சிறுபான்மையினரின் பாதுகாவலர் அதிமுக தான் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு
முன்பு ஒரு விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். திடீரென்று சிறுபான்மையினர் மீது பாசம் பொங்குகிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் என்று கபட நாடகம் போட்டுக்கொண்டு இருக்கிறார். அப்படி வெளியே வந்தது உண்மையானால், பாஜகவை பற்றி ஏதும் பேசி உள்ளாரா? அது ஒரு நாடகம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தான் ஒன்றிய அளவில் வெற்றி பெறும் அதனை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags :
Advertisement