Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம்!” - உச்சநீதிமன்றம் கருத்து

06:36 PM Feb 14, 2024 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து, அந்த குழுவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Advertisement

தூத்துக்குடியில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கடந்த 2018-ல் போராட்டம் நடைபெற்றது. இது, பெரும் போராட்டமாக வெடித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018, மே 28 முதல் இந்த ஆலை மூடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து, தடை உத்தரவை நீக்கி மீண்டும் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் பலர் வேலை இழந்துள்ளனர் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் சுமார் 10,000 பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்றும் வேதாந்தா தரப்பில் வாதிடப்பட்டது. வேதாந்தா நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். தூத்துக்குடி சிப்காட் பரப்பளவு 1,800 ஏக்கர் என்றும், அதில் 1000 ஏக்கர் பரப்பளவில் ஸ்டெர்லைட் நிறுவனம் இயங்கி வருவதாகவும், சிப்காட்டில் 67 நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், அவற்றில் 27 நிறுவனங்கள் ரெட் கேட்டகிரியில் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரெட் கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலை மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வேதாந்தா தரப்பு வாதம் வைத்துள்ளது. மேலும், 2018ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு லைசென்ஸ் புதுப்பிக்க விண்ணப்பித்தபோது அது கிடப்பில் போடப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலை செயல்படக்கூடாது என தமிழக அரசு தெரிவித்ததாகவும், வேதாந்தா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டின்போது, இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் 36 சதவீதம் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் உற்பத்தி செய்ததாகவும், நாளொன்றுக்கு 1700 டன் தாமிரத்தை உற்பத்தி செய்யும் திறனுடன் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது என்றும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் வேதாந்தா தரப்பு வாதங்களை வைத்தது.

இதனை அடுத்து தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்த தமிழ்நாடு அரசு, இதே நிறுவனத்துக்கு ஹட்ரோ கர்பன் விவகாரத்தில் அனுமதி அளிக்கப்பட்டது, அப்படி இருக்கையில் இந்த நிறுவனத்தின் மீது காழ்புணர்ச்சி உள்ளது என்று எவ்வாறு கூற முடியும். இந்த ஆலை விவகாரத்தை பொறுத்தவரை சுற்றுசூழல் மாசு, தூத்துக்குடி மக்களின் நலன் உள்ளுட்டவற்றையே அரசு கருத்தில் கொண்டு செயல்பட்டது. அதனடிப்படையில் தான் ஆலை மூடப்பட்டது என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

வாத, பிரதிவாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம், அந்த நிபுணர் குழு தனது அறிவுறுத்தலை வழங்கட்டும், அதனடிப்படையில் முடிவெடுக்கலாம் அல்லது ஆலைக்கு நிபந்தனைகளை விதிக்கலாம். மேலும் தமிழக அரசின் கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் ஒதுக்கிவிட முடியாது. அதேவேளையில் தமிரம் தேவை தொடர்பான கருத்தையும் தள்ளி விட முடியாது. எனவே அனைத்து விவகாரத்தையும் ஆராயலாம், அதனடிப்படையில் அனைவருக்குமான win win situstion என்ற ஒரு முடிவை எடுக்கலாமே என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
Anil AgarwalIndianews7 tamilNews7 Tamil UpdatesStartupssterliteSTERLITE COPPERSupreme courtTN GovtTuticorinVedanta
Advertisement
Next Article