For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நாங்கள் ஏழைகளின் பக்கம் உள்ளோம் ; மோடி பணக்காரர்கள் பக்கம் உள்ளார்" - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

09:51 PM Mar 17, 2024 IST | Web Editor
 நாங்கள் ஏழைகளின் பக்கம் உள்ளோம்   மோடி பணக்காரர்கள் பக்கம் உள்ளார்    மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
Advertisement

"நாங்கள் ஏழைகளின் பக்கம் உள்ளோம் ; மோடி பணக்காரர்கள் பக்கம் உள்ளார்" என இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement

நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடங்கி 63 நாட்கள் நடைபெற்ற இந்த பயணம் 14 மாநிலங்களை கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவுற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவையொட்டி, மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை (மார்ச் 17) கூட்டணி  கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சரத்பவார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் முதல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் என்பதால் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்ததாவது..

” இந்திய நீதிப்பயணத்தை முடக்க மத்திய அரசின் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டன. நாம் ஒரு அரசியல் கட்சிக்கு எதிராகத்தான போராடுகிறோம் என்று எல்லோரும் கூறுகிறார்கள். அது உண்மையல்ல; இந்து தர்மத்தில் ஒரு அதிகார மையம் உள்ளது, அதற்கு எதிராகத்தான் போராடுகிறோம்.

இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க முடியவில்லை. ஆனால், ஒரு திருமணத்திற்காக பத்தே நாட்களில் பன்னாட்டு விமான நிலையத்தை ஏற்படுத்தினார்கள். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தலித்கள் மற்றும் பழங்குடியினர் ஒருவர் கூட கிடையாது

இந்த பெரும் பணக்காரர்கள் தான் மோடி அரசை இயக்குகிறார்கள். EVM இயந்திரங்களை அரசியல் கட்சிகள் முன்பு எடுத்துக்காட்ட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. EVM இல்லாமல் நரேந்திர மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது..

”காங்கிரஸ் கட்சியின் சார்பில் விவசாயிகள், இளைஞர்கள், மகளிர் உள்ளிட்டோருக்கு 5 வாக்குறுதிகளை அளித்துள்ளோம். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை அதில் அடங்கும். ஏழைகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். நாங்கள் ஏழைகளின் பக்கம் உள்ளோம் - மோடி பணக்காரர்கள் பக்கம் உள்ளார் “ என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement