“நிதிஷ்குமார் விலகுவார் என்று முன்பே தெரியும்” - மல்லிகார்ஜுன கார்கே...
நிதிஷ்குமார் விலகுவார் என்று என்று எங்களுக்கு முன்னரே தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும், ஆம்ஆத்மி கட்சி பஞ்சாப்பிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகாரின் முதலமைச்சருமான நிதிஷ்குமார் இன்று பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
“நிதிஷ்குமாரின் விலகல் குறித்து தேஜஸ்வி யாதவ்வும், லாலு பிரசாத்தும் முன்பே தெரிவித்தனர். நிதிஷ்குமார் விலகுவார் என்று எங்களுக்கு முன்னரே தெரியும். அவர்கள் சொன்னவாரே அவர் விலகிவிட்டார். அவர் கூட்டணியில் இருக்க விரும்பினால் இருந்திருப்பார். அவர் வெளியேற விரும்புகிறார்.” என தெரிவித்தார்.
இந்நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை தொடர்ந்து, பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கியுள்ளார். இதன்மூலம், பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.