Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராஜஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

07:10 AM Nov 25, 2023 IST | Web Editor
Advertisement

ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

Advertisement

காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யக்கூடிய  ராஜஸ்தான் மாநிலத்தில்  மொத்தம் உள்ள  200 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால்  சமீபத்தில் கரண்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீர் சிங் மரணமடைந்தார்.  எனவே அந்த குறிப்பிட்ட  தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி 199 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 1,862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  மொத்தமாக சுமார் 5.25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க  உள்ளனர். 51,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட
2.74 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநில காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், துணை ராணுவப் படையினர், பிற மாநில ஆயுதப் படையினர் உள்பட 1,70,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி இன்று காலை 7மணிக்கு 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

Tags :
5 state electionBJPCongressRajasthanRajasthan ElectionVOTING
Advertisement
Next Article