For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க குரல் எழுப்பவேண்டும் | ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின்  கடிதம்!

08:30 AM Jun 29, 2024 IST | Web Editor
நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க குரல் எழுப்பவேண்டும்   ராகுல் காந்திக்கு மு க ஸ்டாலின்  கடிதம்
Advertisement

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவேண்டும் என எதிர்கட்சித் தலைவர்  ராகுல் காந்திக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதிய ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து நீட் முறைகேடுகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. நேற்று டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை வளாகத்தில் போராடிய மாணவர்கள் போலீசார் மீது தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நேற்று நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்று கோரியும், இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டைப் போன்று அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர்  ராகுல் காந்திக்கு நேற்று (28-6-2024) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவேண்டும் என்று கோரியும், இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டைப் போன்று அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்திக்கு நேற்று (28-6-2024) கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முறையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருவதை தாங்கள் அறிவீர்கள் என்றும், தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்த சமீபத்திய செய்திகள் நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக கடினமாக உழைக்கும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துள்ளதாகவும், கிராமப்புற ஏழை எளிய இளைஞர்கள் மருத்துவம் பயிலவேண்டும் என்ற கனவையும் இந்தத் தேர்வுமுறை தடுக்கிறது என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை எதிர்கட்சித் தலைவரின் பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர். தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் தாங்கள் குரல் எழுப்பவேண்டும் என்றும், இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலங்கள் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாட்டைப் போன்று அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :
Advertisement