For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விநாயகர் சதுர்த்தி - #ParleG பிஸ்கெட் விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு!

02:18 PM Sep 04, 2024 IST | Web Editor
விநாயகர் சதுர்த்தி    parleg பிஸ்கெட் விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு
Advertisement

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பார்லேஜி வெளியிட்ட விளம்பரத்திற்கு நெட்டிசன்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

Advertisement

இந்துக்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முழுமுதுற் கடவுள் விநாயகர் அவதரித்த நாளை அனைவரும் விநாயகர் சதுர்த்தி என்று வெகு சிறப்பாக வருடம்தோறும் கொண்டாடி வருகின்றனர். இத்திருநாளில் அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்துக்கள் தங்கள் இல்லங்களில் விநாயகருக்கு பூஜை செய்து சுண்டல், கொழுக்கட்டை போன்ற பதார்த்தங்களை படைத்து வழிபடுவர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களை கவரும் வகையில் ஜவுளி, மளிகை பொருட்கள், இனிப்புகள் என பல நிறுவனங்கள் விளம்பரங்களை வெளியிடுவர். அந்த வகையில் பிரபல பார்லே நிறுவனத்தின் 90ஸ்களின் பிரபலமான பிஸ்கெட்டான பார்லே -ஜி பிஸ்கட் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அந்த விளம்பரத்தில் விநாயகர் சிலையை கடைகளில் இருந்து வீட்டிற்கு வாங்கிச் சிறுவர்களும் , ஆண்களும் எடுத்துச் செல்வதை சிறுமி பார்த்துக் கொண்டிருக்கிறார். சிறுமியின் தாயும் அவரும் விநாயகர் சிலையை வாங்கிய பின்னர் அதனை எடுத்து சிறுவர்களை அழைக்கிறார். அதனைக் கண்ட சிறுமி நாம் விநாயகர் சிலை எடுப்போமா எனக் கேட்கிறார். அதற்கு பதிலளித்த அந்த கடைகாரர் விநாயகர் சிலையை ஆண்களும் சிறுவர்களும்தான் எடுத்துச் செல்ல வேண்டும். பெண்கள் எடுத்துச் செல்லக் கூடாது என தெரிவிக்கிறார்.

அப்போது குறுக்கிட்ட இளைஞன் ஒருவன் எனது அத்தை ஏன் விநாயகரை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது என்று கேட்கிறான். அதற்கு அந்த கடைகார முதியவர், சிறுவர்கள் மட்டுமே விநாயகரை வீட்டிற்கு எடுத்துச் செல்வதுதான் பாரம்பரியம் என்று கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து அந்த இளைஞன் அனைவரையும் அழைத்து சத்தமாக பேசத் தொடங்குகிறான். “எனக்கு ஒரு விஷயத்தை சொல்லுங்கள், பண்டிகை முடிந்தவுடன் விநாயகரை வீட்டிற்கு எடுத்துச் செல்வது யார்? அதற்கு அம்மாக்கள் விநாயகரின் தாய் கவுரி என்கின்றனர். அப்படியிருக்க ஆவலுடன் காத்திருக்கும் நமது பெண்களும் விநாயகரை எடுத்து வரட்டுமே எனச் சொல்கிறான். இதனைத் தொடர்ந்து பேசிய அந்த இளைஞன் இந்த முறை விநாயகர் தாயுடன் வீட்டிற்கு வருவார், மேலும் தாயுடன் திரும்புவார் எனச் சொல்கிறான்.

இதன் பின்னர் அங்கிருந்த பெண்கள் சிலர் இதனை மறுத்து இது பாரம்பரியம் இதனை மாற்றக் கூடாது என்கின்றனர். ஆனால் இளைஞன் அப்பெண்களின் கோரிக்கையை நிராகரித்து , " நாம் எல்லா நல்ல விஷயங்களையும் விநாயகரிடம் தொடங்குகிறோம், எனவே இந்த புதிய வழக்கத்தை ஏன் அவரிடமிருந்தே தொடங்கக்கூடாது ? " எனக் கூறுகிறான்.

இந்த வீடியோ தற்போது சர்ச்சையாகி வருகிறது. விநாயகரை பெண்கள் எடுத்துச் செல்லக் கூடாது என இந்துமதம் சொல்லவில்லை பார்லேஜி நிறுவனம் இந்துக்களிடம் இல்லாத விஷயத்தை இருப்பதாக கூறி தவறாக சித்தரிக்கிறது எனவும் இதனை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags :
Advertisement