விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - சென்னையில் 16,500 போலீசார் குவிப்பு!
நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனிடையே வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, நீர் நிலைகளில் கரைக்க, போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு சென்னை பெருநகரங்களில் சுமார் 16,500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஊர்க்காவல் படையினர் 2000 பேரும் கூடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மெரினா கடற்கரையில் 1,565 விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் மட்டும் சுமார் 16,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை எழும்பூர் புதுப்பேட்டை, ராயப்பேட்டை , ஐஸ் ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களான இஸ்லாமியர்கள் இருக்கக்கூடிய இடங்களில் மசூதிகளிலும் கிறிஸ்துவ ஆலயங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மேல் தளத்திலிருந்து தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட உள்ளனர். சுமார் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கிரைன் மூலமாக கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது