Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி - அண்ணாமலை அறிவிப்பு!

02:28 PM Jun 14, 2024 IST | Web Editor
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.  

Advertisement

திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்த தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது.

வேட்புமனுதாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 21 ஆகும்.  மிக குறைந்த காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் உள்ளன.  வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-இல் நடைபெறும்.  மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் உள்ளதால்,  அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.  இதனைத் தொடர்ந்து,  ஜூலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக் கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போல், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயாவை வேட்பாளராக அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிவித்தார்.

இந்த நிலையில்,  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Tags :
AnnamalaiBJPby electionElection2024PMKvikravandi
Advertisement
Next Article