விஜய் கட்சிக்கு எனர்ஜி இருக்கு...கனிசமான வாக்குகளை பெறுவார் - கார்த்தி சிதம்பரம் எம்.பி பேட்டி!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றுவோம் என்ற பிரச்சார நடைபயணம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் கட்டி கொடியேந்தி அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவோம் என்ற கோஷங்களுடன் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து செக்காலை சாலை, கல்லூரி சாலை வழியாக ராஜீவ் காந்தி சிலை அருகில் நடைபயணம் நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட, நகர ஒன்றிய மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "பாஜக மடியில் அமர்ந்து கொண்டு நேர் எதிர் கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி எப்படி அழைக்கிறார் என்று தெரியவில்லை. விஜய் கட்சிக்கு எனர்ஜி இருக்கு, திமுக - அதிமுக வேண்டாம் என நினைக்கும் வாக்காளர்கள் காலம் காலமாக தமிழகத்தில் உள்ளனர்.
தேர்தலில் விஜய் கணிசமான வாக்குகளை பெறுவார் ஆனால் அது வெற்றி பெறும் அளவிற்கு கிடைக்குமா? என்பதை என்னால் கணித்து சொல்ல முடியாது. அதிமுகவின் பலமே இரட்டை இலை தான் காமராஜர் குறித்த சர்ச்சை தேவையற்றது. முதல்வர், திருச்சி சிவா உள்ளிட்டோர் விளக்கம் கொடுத்து விட்டனர். கிட்னி திருட்டு சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்புடைய மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் என்று கூறினார்.