விஜய் களமிறங்கும் மதுரை - தவெக 2வது மாநில மாநாட்டின் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரம்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தல் களத்தைச் சந்திக்கத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக,
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, பாரபத்தி பகுதியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான தேதியை தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மாநாட்டுப் பணிகள் கடந்த ஜூன் 16-ஆம் தேதி காலை, கட்சிப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடப்பட்டுத் தொடங்கப்பட்டன.
மேலும் மாநாட்டிற்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி, கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களைச் சந்தித்து மனு அளித்தார். மாநாட்டிற்கு இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தற்போது, மாநாட்டின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படும் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. "பருந்துப் பார்வை" (drone view) காட்சிகளில் இந்த மேடை அமைக்கும் பணி கண்கவர் விதமாக உள்ளது.
இதனை தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அமர்வதற்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் தனித்தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகத் தடுப்பு வேலி அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.
இந்த மாநாடு, தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் தவெக கட்சியின் பலத்தையும் நிரூபிக்க இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.