For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொம்மை ஆமைக்கு சால்வை அணிவித்து மாலை சூட்டினார் - விஜய் ஆண்டனி!

சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டிற்கு பின்பு நான் மீண்டும் இசையில் கவனம் செலுத்தவுள்ளேன்.
09:58 PM Jul 24, 2025 IST | Web Editor
சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டிற்கு பின்பு நான் மீண்டும் இசையில் கவனம் செலுத்தவுள்ளேன்.
பொம்மை ஆமைக்கு சால்வை அணிவித்து மாலை சூட்டினார்   விஜய் ஆண்டனி
Advertisement

விஜய் ஆண்டனி நடிப்பில், அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில், உருவாகியுள்ள படம் “சக்தித் திருமகன்”. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது.

Advertisement

இதில் இயக்குனர் அருண் பிரபு பேசியபோது, பொதுவாகவே எனக்கு ஜனரஞ்சகமான அரசியல் படம் பார்க்க எனக்கு பிடிக்கும், அப்படிபட்ட படம் தான் சக்தித் திருமகன் படமும். அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் இப்படம் இருக்கும். ஒரு கதையை சொல்லும்போது ஒரு பதட்டம் எப்போதுமே இருக்கும் அந்த படத்தில் ஹீரோயிசம் மற்றும் அரசியல் இருக்கும் அதை இப்படத்தில் நான் இயக்கியுள்ளேன். அருவி படத்தில் எந்த அளவிற்கு உழைத்தோமோ அதே உழைப்பு தான் இப்படத்திலும் செய்திருக்கிறேன். என்றார்

இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி பேசுகையில், நான் எப்போதுமே வேலை வேலை என்று வேலையில் கவனம் செலுத்துவதனால் எனக்கு பத்திரிகை நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் தான் நான் சமீபத்தில் கொடுக்கும் அனைத்து நேர்காணல்களிலும் மிகவும் காமெடியாகவும், ஜாலியாகவும் பதில் அளிக்கிறேன்.

மேலும் தமிழ் சினிமாவில் நான் டாப் 5 படங்களில் அருவி ஒரு படம். அதே போல் இந்திய அளவில் டாப் 3 இயக்குனர்களில் அருண் பிரபு ஒருவர். எப்போது அருண் வந்தாலும் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் அவருக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அவருக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு தயாராக இருக்கிறேன். அருண் பிரபு அடுத்து இயக்கும் படம் பெரிய படமாக தான் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் பாடலாசிரியர் கார்த்திக் நேதா அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எப்போதுமே மகிழ்ச்சியான தருணமாக தான் இருந்திருக்கிறது. நான் சில காலமாக இசையமைப்பதில் கவனம் செலுத்தவில்லை. சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டிற்கு பின்பு நான் மீண்டும் இசையில் கவனம் செலுத்தவுள்ளேன் என்றார்.

சாய் அபிங்கர் - சாம் சி எஸ் controversy விஜய்ஆண்டனி பேசுகையில், இருவரும் திறமைசாலிகள். குறுகிய காலத்தில் அவர் நல்ல இடத்தில் உள்ளார் இதை யாரும் தவறாக பார்க்க வேண்டாம் என்றார். பின்னர் கேக் பதில் பிரியாணி வெட்டி பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடினார். மார்கன் படம் வெற்றி பெற்றதால் பொம்மை ஆமைக்கு சால்வை அணிவித்து மாலை சூட்டினார் என கூறினார்.

Tags :
Advertisement