For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”திமுக ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டமும் இல்லை” - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்...!

கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில்  எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
09:40 PM Oct 29, 2025 IST | Web Editor
கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில்  எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
”திமுக ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டமும் இல்லை”   அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
Advertisement

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழவதும் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மகுடஞ்சாவடி பகுதியில் மக்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

Advertisement

”கடந்த தேர்தலில்  சேலம் மாவட்டத்திலுள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது.  2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் திமுகவை தோல்வியடைய செய்ய வேண்டும்.

கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில்  எந்த ஒரு புதிய திட்டமும் இல்லை. மண்,கல்  போன்றவற்றை திருடிய திமுகவினர் தற்போது கிட்டினியையும் திருடி வருகின்றனர். இது சம்பந்தமாக திமுக சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டால் அது  திருட்டு இல்லை முறைகேடு என்கிறார்.

ஆறு மணி நேரம் கூடி பேசுவதற்கு 30 கோடி ரூபாய் செலவு செய்த திமுக விவசாயிகளின் நெல் மூட்டைகளை ஏன் பாதுகாக்கவில்லை. திமுக ஆட்சியில் தெரு தெருவாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யபடுகிறது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்றார்.

Tags :
Advertisement