டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வாள் சுழற்றுவதாக வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?
This News Fact Checked by ‘India Today’
ஹரியானா மாநிலம் ஜிந்தில் பிறந்த ரேகா குப்தாவின் அரசியல் பயணம், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் தொடங்கியது. இந்த நிலையில்தான் ரேகா குப்தா தனது வாள் சுழற்றும் திறமையை வெளிப்படுத்துவதைக் காட்டும் ஒரு வீடியோ சமீபத்திலிருந்து வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை X இல் பகிர்ந்த, ஒருவர் “RSS ஊழியரின் பழைய வீடியோ மற்றும் அவர் ABVP-யில் பணிபுரிந்து நீண்ட காலம் பாஜகவில் பணியாற்றிய பிறகு முதல் முறையாக MLA-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது டெல்லி முதல்வராகியுள்ளார். ரேகா குப்தாவுக்கு வாழ்த்துக்கள் @gupta_rekha ஜி.” என எழுதினார் ,
இந்த காணொலியில் காணப்படும் பெண் ரேகா குப்தா அல்ல, மாறாக நடிகை பயல் ஜாதவ் என்பதை இந்தியா டுடே உண்மைச் சரிபார்ப்பு கண்டறிந்துள்ளது.
உண்மை சரிபார்ப்பு :
வைரலான காணொலியின் கீஃப்ரேம்களைத் பிரித்து அதனை கூகுள் தேடலுக்கு உட்படுத்தியபோது, பயல் ஜாதவ் பகிர்ந்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு எங்களுக்குக் கிடைத்தது . பிப்ரவரி 19 தேதியிட்ட இந்தப் பதிவு மராட்டிய ஆட்சியாளர் சத்ரபதி சிவாஜிக்கு அஞ்சலி செலுத்துவதாக இருந்தது. தனது தற்காப்புக் கலைத் திறமைக்காக மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனமான " சவ்யசாச்சி குருகுலம் "-ஐ அவர் பாராட்டினார்.
பாயல் ஜாதவ் 2023 ஆம் ஆண்டு "பாப்லியோக்" திரைப்படத்தின் மூலம் மராத்தி சினிமாவில் அறிமுகமான ஒரு நடிகை ஆவார். அவர் " மன்வத் மர்டர்ஸ் " என்ற தொலைக்காட்சி தொடரிலும் பணியாற்றியுள்ளார், மேலும் " த்ரீ ஆஃப் அஸ் " என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜாதவ் புனே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் மற்றும் லலித் கலா கேந்திராவில் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். முன்னதாக, ஜனவரி 5, 2023 அன்று, வைரலான வீடியோவில் காணப்பட்டதைப் போன்ற உடையில் தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதனால், நடிகை பயல் ஜாதவின் காணொலி டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் பழைய காணொளி என்று தவறாகப் பகிரப்பட்டது தெளிவாகிறது.
முடிவு :
டெல்லி முதலமைச்சரான ரேகா குப்தா தனது வாள் சுழற்றும் திறமையை வெளிப்படுத்துவதைக் காட்டும் வீடியோ என்ற பெயரில் சமீபத்திலிருந்து வைரலாகி வருகிறது. இது அவரது இளமைக் காலத்தில் எடுக்கப்பட்டது என்றும் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து இந்தியா டுடே நடத்திய ஆய்வில் வைரல் வீடியோ நடிகை பயல் ஜாதவின் காணொலி என்று கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.