“2026-ல் வெற்றி தொடரும், தமிழ்நாட்டை தவிர்ப்பவர்களுக்கு இடமில்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆறு நிமிடங்களுக்கு 16 ஆயிரம் பெண்கள் ஒரே மாதிரியான பாவனையுடன் வள்ளி கும்மி ஆடி கின்னஸ் சாதனை புரிந்தனர். இந்த நிலையில் சாதனை புரிந்த பெண்களுக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்கு கலைக்குழு சார்பில் பாராட்டு விழா கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “வள்ளிகும்மி ஆடிய 16 ஆயிரம் பெண்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கலக்கீட்டீங்க, பெண்கள் என்றாலே சாதனைதான். சாதனை என்றாலே பெண்கள் தான். என்னைபொறுத்தவரை இந்த ஆட்சி மகளிருக்கான ஆட்சிதான் என்பது உங்களுக்கு தெரியும். கொமதேக சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. வள்ளிகும்மியில் இதுவரை 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்றிருப்பது சாதனையாக இருக்கிறது.
சட்டமன்றத்திலும் மக்கள் மன்றதிலும் மக்களுக்குனா போராடியும் வாதாடியும் மேற்குமண்டலத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஈஸ்வரன். அவர் எங்கே சென்று பேசினாலும் மேற்கு மண்டலத்தில் நன்மை தான் எதிரொலிக்கும். மேற்கு மண்டலத்திற்கும் ஏராளமான திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது. உங்களது நன்மதிப்பையும் பெற்றிருப்பதால்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் முழு வெற்றியை பெற்றிருக்கிறோம். 40/40 வெற்றி பெற்றது நமது ஆட்சிக்கு கிடைத்த சான்றிதழ். 2026 ஆம் ஆண்டு நாம் தான் வெற்றி பெற போகிறோம். இந்த அணிதான் வெற்றி போகிறது. இது தொடரும்.
மத்திய அரசு வாக்களித்தாக தமிழ்நாட்டை வஞ்சித்து கொண்டிருக்கிறது.நான் இன்று காலை பிரமருக்கு கோரிக்கையை தெளிவாக குறிப்பிட்டு சொன்னேன்.மக்களின் முக்கிய பிரச்சனைகளும் பதில் சொல்லாமல் தவிர்க்கிறவர்களுக்கு நாம் என்ன செய்ய முடியும். தமிழ்நாட்டை தவிர்க்கிற உங்களுக்கு மீண்டும் இடமில்லை என்பதை வரும் தேர்தலில் மக்கள் அதை வழங்கிட வேண்டும். தொகுதி மறு சீரமைப்பு பற்றி சட்டமன்றத்தில் தீர்மானம், அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தியுள்ளோம், பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகக் கொண்ட கூட்டமும் நடத்தினோம் ஆலோசனை செய்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்டோம் இதுவரை கிடைக்கவில்லை. எல்லா துறைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும். மத்திய அரசு போதிய நிதி அளித்திருந்தால் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலகளவில் முதலிடம் பெற்றிருக்கும்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.