"திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்.." - தவெக தலைவர் விஜய்
திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்!
மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை…
— TVK Vijay (@TVKVijayHQ) November 1, 2025
தமிழ்நாடு நாளையொட்டி தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்! மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்! தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.