திரையுலகினர் குறித்து அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை தேவை - நடிகர் வடிவேலு வலியுறுத்தல்.!
சென்னையில் இன்று நடிகர் சங்கத்தின் 69 வது பொதுக்குழு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு நடிகர், நடிகையர் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் பேசிய நடிகர் வடிவேலு
"இப்போது பெரிய கலைஞர்கள் சின்ன கலைஞர்கள் என பார்க்காமல் யூடியூப்பில் தவறாக பேசுகிறார்கள். நடிகர் சங்கம் இருக்கிறதா என தெரியவில்லை. அவங்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும். சில தயாரிப்பாளர்கள் மற்ற படம் ஓட கூடாது என பணம் கொடுத்து சிலரை பேச வைக்கிறார்கள். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலும் இதை செய்ய சிலர் இருக்கிறார்கள். கேரளாவில் இப்படி பேசினால் பிதுக்கிவிடுவார்கள். மசாலா போட்டு விடுவார்கள். இந்த விஷயத்தில் போர் கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தவறாக பேசுபவர்கள் தூங்காமல் துடிக்க வேண்டும். அவர்கள் மீது கடுமை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இன்னும் சிலர் வாய் மீது மைக் வைத்து, கருத்து கேட்டு ஒரு படத்தை தவறாக பேசுகிறார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் இருந்து வார்த்தை புடுங்கி காசு பார்க்கிறார்கள். கேமரா பார்த்து சிலர் இப்படி பேசுகிறார்கள். அவர்கள் வார்த்தையை மாற்று கிறார்கள். இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கைகள் எடுக்கிறதோ இல்லையோ , நடிகர் சங்கம் எடுக்க வேண்டும்” என்று பேசினார்.
அதற்கு பதில் அளித்த நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ் அண்ணன் கோரிக்கை ஏற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.