For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்வு" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கீழடி அருங்காட்சியகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.
11:40 AM Jul 30, 2025 IST | Web Editor
கீழடி அருங்காட்சியகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.
 அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்வு    எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Advertisement

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி கிராமத்தில் கீழடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 2020 ஜூலை மாதம் 20 ஆம் தேதி அதிமுக ஆட்சி காலத்தில் கீழடி அருங்காட்சியகம் கட்டுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இதனை 2023 மார்ச் 5 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2 ஏக்கர் நிலத்தில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18 கோடியே 43 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கீழடி அருங்காட்சியகம் கட்டப்பட்டது.

Advertisement

'வைகையும் கீழடியும், நிலமும் நீரும், கலம் செய் கோ, ஆடையும் அணிகலன்களும், கடல் வழி வணிகம், வாழ்வும் வளமும்', என்ற 6 தலைப்புகளின் கீழ் அருங்காட்சியகத்தில் பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

கீழடியில் 2015 முதல் 2017 வரை 3 கட்டங்களாக மத்திய தொல்லியல் துறையும், 2018 முதல் தற்போது வரை 7 கூட்டங்களாக மாநில தொல்லியல் துறையும் அகழாய்வு நடத்தப்படுகின்றது. கீழடியில் மத்திய - மாநில தொல்லியல் துறை சார்பில் 10 கட்டங்களாக அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதன் முறையாக கீழடி அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்டுள்ளார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், கோகுல இந்திரா உள்ளிட்டோர் வந்துள்ளனர்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு கீழடி அருங்காட்சியகம் பொறுப்பாளர்கள் கீழடியின் வரலாற்று புத்தகத்தை பரிசாக கொடுத்து வரவேற்றனர். கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று தகவல்களை கூறினர்.

இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கீழடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கீழடியில் கிடைத்த அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, அதனை பார்வையிட்டேன். 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் கீழடியில் அகழாய்வு தொடங்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் கீழடி அருங்காட்சியம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கீழடி அகழாய்வு தமிழர்களின் பழமையான நாகரீகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. கீழடியில் அருங்காட்சியம் கட்டும் பணிகளை அதிமுக தொடங்கியது. கீழடியில் நகர நாகரிகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு உடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

தமிழர்களின் நாகரிகத்தில் பறைசாற்றுவதற்கு கீழடி அகழ்வாராய்ச்சி உதவியாக இருந்துள்ளது. கீழடி அகழ்வாய்வுக்கு கீழடி என் தாய்மடி என பெயர் சூட்டியது அதிமுக ஆட்சியில் தான் கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. நிறைய அரசு கல்லூரிகளில் முதல்வர்கள் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது மூன்று லட்சம் அரசு ஊழியர்கள் காலி பணியிடங்கள் இருந்தது. தற்போது அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்ந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement