For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகாரில் ”புஷ்பா” - ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்!

10:00 PM Nov 17, 2024 IST | Web Editor
பீகாரில் ”புஷ்பா”   ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்
Advertisement

பீகார் மாநிலம் பாட்னாவில் புஷ்பா 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடைபெற்ற நிலையில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் பலருக்கு காயம் ஏற்பட்டது.

Advertisement

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. கிட்டத்தட்ட ரூ. 350 கோடி மேல் இந்த திரைப்படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்திற்கு ‘புஷ்பா 2 தி ரூல்’ என பெயரிடப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து திரைப்படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது.

புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் நடனமாட நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருக்கிறார். அவர் நடமாடுன் அந்த பாடலுக்கு 'கிஸ்சிக்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தில் டிரெய்லர் இன்று மாலை வெளியானது.

புஷ்பாவில் அல்லு அர்ஜுனின் ஸ்டைலான நடையும் பாவனையும் உலகம் முழுவதும் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த வகையில் வட மாநில மக்களிடமும் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பாட்னாவிலுள்ள காந்தி மைதானத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விடுமுறை நாளில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் மக்கள் கூட்டம் மைதானத்துக்கு வெளியே அலைமோதியது. பாஸ் வாங்கிச் செல்ல ரசிகரகள் முண்டியடித்துக்கொண்டு நின்றதால் மைதானத்துக்கு வெளியே கூட்ட நெரிசல் அதிகரித்ததால் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Tags :
Advertisement