Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று மதுரை வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை ஒட்டி மதுரை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
08:21 AM Jun 07, 2025 IST | Web Editor
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை ஒட்டி மதுரை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Advertisement

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் நாளை (ஜுன் 8) பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜுன் 7) மதுரை வருகை தருகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று இரவு 8.30 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். மதுரை சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று இரவு தங்குகிறார்.

Advertisement

இதையும் படியுங்கள் : Bakrid 2025 | பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்… தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை!

நாளை (ஜுன் 8) காலை அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதன்படி, விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை செய்யபடுகிறது. மேலும், வெடிகுண்டு தடுப்பு போலீசார் மூலம் விமான நிலையம் முழுவதும் தீவிர கண்காணிப்பு சோதனை நடைபெறுகிறது.

Tags :
amit shahBJPMaduraimadurai airportnews7 tamilPolice
Advertisement
Next Article