தமிழகம் வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மநாடு இன்று திரு நெல்வேலியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 8 ஆயிரத்து 595 பூத் நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திரு நெல்வேலிக்கு வந்துள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். முன்னதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் ஏற்பாடு தேநீர் விருந்து செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில் அமித்ஷா கலந்து கொள்ளாமல் நேரடியாக மாநாடு நடைபெறும் தச்சநல்லூர் இடத்திற்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு சென்றுள்ளார்.