பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள்! முழு விவரம் இதோ...
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத நிலையில், அந்த மாநிலத்திற்கு பல சிறப்பு திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்த கூட்டணியில் முக்கிய பங்களிப்பாக ஆந்திராவின் தெலுங்கு தேசக் கட்சியும், பீகாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியும் அங்கம் வகிக்கின்றன. இந்த இரண்டு மாநில கட்சிகளும் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள். ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகான கூட்டத் தொடரில் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கமுடியாது என மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு தெரிவித்திருக்கிறது. இது பாஜக ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக அமைந்த ஐக்கிய ஜனதா தளத்திற்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
இந்நிலையில் அதனை ஈடுகட்டும் விதமாக இன்று பீகாருக்கும், ஆந்திராவிற்கும் பல திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி ஆந்திராவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள் குறித்து இங்கு காண்போம்.
- ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
- ஆந்திராவில் தலைநகர் அமராவதியை நிறுவ ரூ. 5000 கோடி
- பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி
- விசாகப்பட்டினம் - சென்னை தொழில் வழித்தடத்துக்கு கூடுதல் ஒதுக்கீடுகள்
- ஆந்திரப் பிரதேசத்தை உள்ளடக்கிய ஹைதராபாத் -பெங்களூரு தொழில்வழித்தடம் புதிதாக நிறுவப்படும்.
- ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014ன் கீழ் ஆந்திராவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற மத்திய அரசு உதவும்.
- ஆந்திர வளர்ச்சித் திட்டங்களுக்கான மூலதனச் செலவினங்களுக்காக கூடுதல் ஒதுக்கீடு
- ஆந்திர மாநிலத்தின் 3 மாவட்டங்களுக்கு பின்தங்கிய பகுதிகளுக்கான நிதி
- ஆந்திர அரசு புதிய சாலைகள் மற்றும் நீர் குழாய்கள் அமைக்க நிதி உதவி
- ஆந்திராவில் ரயில் இணைப்புகள் மேம்படுத்தப்படும்.