For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருவள்ளூர் | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - 2 பெண்கள் உயிரிழப்பு!

08:26 AM Dec 29, 2024 IST | Web Editor
திருவள்ளூர்   இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து   2 பெண்கள் உயிரிழப்பு
Advertisement

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்திற்குள்ளானதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் 2 பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண்கள் நிலைதடுமாறி கீழே விழுந்த போது லாரி சக்கரத்தில் சிக்கியுள்ளனர். இதில் இரண்டு பெண்களும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவரைப்பேட்டை காவல்துறையினர் உயிரிழந்த 2 பெண்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த பெண்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
Advertisement