"இரு மொழி தமிழ்நாட்டிற்கு போதும்"..."மூன்றாவது மொழி தேவை இல்லை" - அமைச்சர் ரகுபதி பேட்டி!
திமுக கூட்டணி உடையும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு என்று அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
10:40 AM Sep 24, 2025 IST | Web Editor
Advertisement
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "திமுக கூட்டணி உடையும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு.
Advertisement
தேர்தலைக்கண்டு நாங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் தேர்தல் களத்துக்கு தயாராகி விட்டோம். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கும்போது நாங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது.
பழுத்த மரத்தில்தான் கல்லடிப்படும். ஒவ்வொருத்தரும் திமுகவை விமர்சித்தால் தான் அரசியலில் தங்களை நிலைநிறுத்தி கொள்ள முடியும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு மூன்றாவது மொழியை கற்க வேண்டும் என்று திணிக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை மூன்றாவது மொழியை திணிக்க கூடாது. இரு மொழி தமிழ்நாட்டிற்கு போதும் என்பதுதான் மூன்றாவது மொழி தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.