”நீதி என்பது நாட்டின் கடைசி மனிதனுக்கு முதலில் கிடைக்க வேண்டும், அதுவே உண்மையான நீதி” - இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் பேச்சு..!
இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்நாட்டின் வழக்கறிஞர் சங்கம் மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் சட்ட உதவி மையங்கள் சாமானியர்களுக்கு நீதி கிடைப்பதில் மிகப்பெரிய பங்கு ஆட்சி வருவதாகவும் நாடு முழுவதிலும் 37 மாநில சட்ட உதவி மையங்களும் 79 மாவட்ட மையங்களும் 2000-க்கும் மேற்பட்ட தாலுகா அளவிலான சட்ட உதவி மையங்களும் நாட்டின் கடைநிலை குடிமகனுக்கும் இலவசமான சட்ட ஆலோசனைகளையும் சட்ட உதவிகளையும் வழங்கி வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்
சிறைச்சாலையில் உள்ள விசாரணை கைதிகளுக்கும் விதவை மனைவிகளுக்கு பல வருடங்கள் புறக்கணிக்கப்பட்ட பென்ஷன் தொகை கிடைப்பதற்கும் குழந்தைகள் உரிமைகளுக்கும் இந்த சட்ட உதவி மையங்கள் பெரும் பங்கு ஆட்சி வருவதாகவும், நீதி என்பது சமூகத்தின் கடைசி மனிதனுக்கும் முதலில் கிடைக்க வேண்டும் என்பதுதான் உண்மையான நீதி என்று அவர் பேசினார்
கவுதல்யர் காலத்தில் தொடங்கி தற்போது வரை தொன்று தொட்டு இந்த நீதி முறையை இந்தியா கடைப்பிடித்து வருவதால் தான் இந்திய ஜனநாயகம் உலகத்தின் தாயாக இருக்கிறது எனவும் கூறினார்