அமெரிக்காவின் பொருளாதார தடை - ” நட்பற்ற செயல்” என்று புதின் விமர்சனம்
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரேன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினை முடிக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை.
அதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருவாய், உக்ரைன் ரஷ்யா போருக்கு பயன்படுவதாக குற்றம்சாட்டி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்குமாறு வலியுறுத்தினார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகிய இரு பெரும் எண்ணை நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளார். உலக கச்சா எண்ணை விநியோகத்தில் 6 சதவீத பங்கை கொண்டுள்ள இந்த இரண்டு எண்ணை நிறுவனங்களும் ரஷ்யாவின் மிகப் பெரிய வருவாய் ஆதாரமாக உள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை நட்பற்ற செயல் என்று ரஷ்ய அதிபர் புதின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ரஷ்யா மீதான தடைகள் நட்பற்ற செயல். ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் இந்த முயற்சிகள் சில விளைவுகளை ஏற்படுத்தினாலும் எங்களது பொருளாதாரம் பாதிக்கும் வகையில் இருக்காது. இவை நீண்ட 'காலம் நீடிக்காது என்று நம்புகிறோம். அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் ரஷ்யா ஒரு போதும் அடிபணியாது. சுய மரியாதை கொண்ட நாடும், சுயமரியாதை கொண்ட மக்களும் அழுத்தத்திற்காக எதையும் முடிவு செய்ய மாட்டார்கள் என்று கூறினார்.